This is a blog about my poems. I apologise for those who don't know tamil....
என்னுடைய பழைய நோட்டுப் புத்தகங்களை எல்லாம் புரட்டிக் கொண்டு இருந்தேன். ஸ்கூல், மற்றும் காலேஜ் சமயத்தில் எழுதிய சில கவிதைகள் கண்ணில் பட்டன.
யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்!! உங்களுடன் 'ஷேர்' செய்யத் துணிந்து விட்டேன்:
கவிதை 1 : 10th படிக்கும்போது எழுதியது. 'அறுவை போட்டி' ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு, சில 'கடி' ஜோக்ஸ் சொன்னது மட்டுமில்லாது, இந்தக் கவிதையும் சொன்னது ஞாபகம் வருகிறது. பரிசு எதுவும் கிடைக்கவில்லை. அடியும், எதுவும் கிடைக்கவில்லை:
"அறுத்தலும் குழப்பலும், அறுத்துப் பின் குழப்பலும்,
அறுப்பாரையும் அறுத்து, அவரையே குழப்பலும்,
அறுத்து, அறுத்து, அறு சுவை காணலும்,
அறுப்பார் அவர்க்கே அழகு"மற்ற கவிதைகள் பின்னர்!
0 comments:
Post a Comment