ஒரு தமிழ் புஸ்தகம் படிக்க இவ்வளவு நேரம் ஆனது இதுதான் முதல் தடவை. என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. உக்கிரமான எழுத்து.
ஜெயமோகனின் நினைவுகள். அவரது தாயின் மரணம். மரணம் அல்ல. தற்கொலை. தந்தையின் தற்கொலை. சிறு குழந்தையாய் இருந்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள். அம்மாவிற்குப் பிடித்த நாவல்கள். அம்மாவிற்குப் பிடித்த பாட்டுகள். கேரளத்து ரமணன் பாட்டு.
கம்யுனிஸ்டுகளின் கதைகள். அஜிதன் பிறந்தது. கேரளத்து கவிதைகள்
வ்ர்ம வ்வைத்தியரின் சிகிச்சை. தங்கை விஜி. அருண்மொழியை மணந்தது. வேலைக்கு சேந்தது.
துரவியாய் ச்சுற்றியபோது கண்ணில் பட்ட பேரழகி. குழந்தை வளர்ப்புக் கலை.
எதையுமே கதை போல் படிக்க முடியவில்லை. ஏதோ, நானே நின்று ஜெயமோகனுடன் சேர்ந்து நின்று, அவருக்கு நிகழ்ந்தவற்றைப் பார்ப்பது போன்ற உணர்வு.
இது மனதைத் தொடும் எழுத்து இல்லை. இது, மனதை அடித்துச் செல்லும் அலை. அற்புதமான உணர்வு இது.
0 comments:
Post a Comment