எஸ்.ஷங்கர நாராயணன் என்பவர் தொகுத்த கதைகள். எல்லாமே சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள். அற்புதமான கதைகள்.
"சரிவாரிலோன" என்ற தியாகையர் கதை. தியாகராஜ ஸ்வாமிகள் ராமனை நினைந்து நினைந்து உருகி பூஜை செய்து பின்னர் ஊரார் பேச்சால் காயம்பட்டு மனம் வெதும்பும் கதை. அற்புதம்.
"ஏறும் இறையும்" என்று இன்னொரு கதை. ஜெயமோகனின் கதை. அற்புதமாக எழுதப்பட்ட கதை. 'ரிஷ்பம்' என்ற பெயரிலே விளையாடும் கதை.
"உக்ரம்" என்ற ப்ரபஞ்சனின் கதை. நீஜமாகவே உக்ரமான கதை.
"வீணை பவானி" என்ற கல்கியின் கதை. அவருக்கே உரித்தான பாணியில், அழகான, உருக்கும் கதை.
"சின்னம்" என்ற வாஸந்தியின் கதை. தாஸி குலத்தில் பிறந்த பாவத்திற்காக, பாடகி படும் பாட்டைச் சொல்லும் கதை.
"திரிவேணி" என்ற கு.அழகிரிஸாமியின் கதை. இராமன் வருகிறான். தியாகையரின் வீட்டுக்கு வருகிறான். அவர் பாட்டில் மயங்கி, ஸீதாப்பிராட்டியுடன் வருகிறான். அழகான, நெகிழ வைக்கும் கதை.
இளங்கோவனின் "நகுமோமு". சின்ன கதை. ஒரு சின்னப் பெண், ஒரு பெரிய பாடகிக்கு பாட்டின் பொருள் சொல்லி, எனவே அந்தப் பாட்டு எப்படிப் பாடப்ப்ட வேண்டும் என்றும் சொல்கிறாள். நல்ல கதை.
"ஆர்மோனியம் சிரிக்கிறது" என்ற அனுராதா ரமணனின் கதை. தன் மனைவியின் அற்புதமான சங்கீதத்தை ரசிக்கத் தெரியாத மனிதர், கச்சேரி நுணுக்கங்களை பற்றிப் பேசும்போது சிரிக்கும் பெண்ணின் கதை.
லா.ச.ராவின் "ஈ ஜகமுலோ திக்கெவரம்மா". உணர்ச்சி மயமான கதை. கதையின் போக்கிலே, நம்மையும் அப்படியே படாத பாடு படுத்தும் கதை.
இன்னும் சில கதைகளும் இருந்தன. ஆனால், இந்த சில கதைகளே மனதைத் தொட்டு, உணர்வில் கலந்து, உயிரிலும் கலந்து நிற்கின்றன. புஸ்தகம் கிடைத்தால், நிச்சயம் படிக்கவும்.
0 comments:
Post a Comment